''நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை'' : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார்

ஐதராபாத்: நடிகை சவுந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த நிலையில் அது விபத்து அல்ல, கொலை என சமூக ஆர்வலர் ஒருவர் ஆந்திரா போலீஸில் புகார் அளித்துள்ளார். இதில் நடிகர் மோகன்பாபுவிற்கும் தொடர்பு உள்ளதாக அவர் கூறிய நிலையில் இதனை சவுந்தர்யாவின் கணவர் மறுத்துள்ளார்.
தமிழில் பொன்னுமணி, அருணாசலம், படையப்பா, தவசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சவுந்தர்யா. கர்நாடகாவை சேர்ந்த இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். 2004ல் தேர்தல் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் சென்றபோது அது விபத்திற்குள்ளாகி மரணம் அடைந்தார். விபத்து நடந்த சமயத்திலேயே இது விபத்து அல்ல என்பது மாதிரியான பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின் ஆந்திராவின் கம்மம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு என்பவர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் அவர் விபத்தால் இறக்கவில்லை, கொல்லப்பட்டிருக்கிறார் என ஒருவர் புகார் அளித்து இருப்பது தெலுங்கு, கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மோகன்பாபுவையும் இதில் தொடர்புபடுத்தி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மோகன்பாபு, நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சவுந்தர்யா மரணம் தொடர்பாக சிட்டிமல்லு அளித்த புகாருக்கு சவுசந்தர்யாவின் கணவர் ரகு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛மோகன் பாபு உடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் நல்ல நட்புடன் உள்ளோம். சவுந்தர்யாவிடம் இருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தையும் அவர் வாங்கவில்லை. ஆதாரமற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.






மேலும்
-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் அதிகரிக்கும் என கணிப்பு
-
பாக்.,கிற்கு பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் 24 மணி நேரம் கெடு
-
உரிமைகளை பறிப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
பாடவாரியான உலக தரவரிசை பட்டியல்: முதல் 50ல் இடம் பிடித்த 9 இந்திய பல்கலைகள்
-
சமகல்வி என்பது நமது உரிமை: அண்ணாமலை
-
புதுக்கோட்டைக்கு கிடைத்த கவுரவம்: ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை அமைப்பு