பெங்களூரு வெளியேறியது ஏன்: கேப்டன் மந்தனா விளக்கம்

மும்பை: ''முன்னணி வீராங்கனைகளின் விலகல் பெங்களூரு அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது,'' என, கேப்டன் மந்தனா தெரிவித்தார்.

பெண்கள் பிரிமியர் லீக் 3வது சீசன் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி, லீக் சுற்றுடன் வெளியேறியது. சமீபத்தில் மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய பெங்களூரு அணி, ஆறுதல் வெற்றியுடன் விடை பெற்றது.
இதுகுறித்து கேப்டன் மந்தனா கூறியது: முதலிரண்டு போட்டியில் வென்று தொடரை சிறப்பாக துவக்கினோம். அதன்பின் விளையாடிய போட்டிகளில் சோபிக்கத்தவறினோம். கடைசி நேரத்தில் எழுச்சி கண்டதால், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க முடிந்தது. பல போட்டிகளில் கடைசி நேரத்தில் வெற்றியை பறிகொடுத்தோம்.
ஏலத்திற்கு பின், கடந்த சீசனில் எங்கள் அணிக்காக விளையாடிய சில முன்னணி வீராங்கனைகள் காயம் காரணமாக விலகினர். தொடர் துவங்குவதற்கு முன், அவர்களுக்கு இணையான வீராங்கனைகளை தேர்வு செய்ய முடியவில்லை. இது, போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தியது.


இவ்வாறு மந்தனா கூறினார்.

Advertisement