செங்கல்பட்டு:புகார் பெட்டி; 20 ஆண்டாக கொட்டப்படும் குப்பை கண்டுகொள்ளாத இரு நிர்வாகங்கள்

20 ஆண்டாக கொட்டப்படும் குப்பை கண்டுகொள்ளாத இரு நிர்வாகங்கள்



செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, 3வது வார்டில், செல்லியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவின் நுழைவு பகுதியில், ரயில் தண்டவாளம் அருகே, கடந்த 20 ஆண்டுகளாக குப்பை கொட்டப்படுகிறது.

இதனால், தெருவாசிகளும், ரயில் நிலையம் செல்லும் பயணியரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இங்கே எவரும் குப்பை கொட்டாதபடி, ஊராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த 20 ஆண்டுகளாக புகார் அளித்தும், இரண்டு துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட இரு துறைகளின் உயரதிகாரிகளும் உரிய கவனம் எடுத்து, இந்த இடத்தில் யாரும் குப்பை கொட்டாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.இஸ்மாயில், ஊரப்பாக்கம்.

Advertisement