உப்புபாளையம் மதுரை வீரன்கோவில் கும்பாபிஷேக விழா


உப்புபாளையம் மதுரை வீரன்கோவில் கும்பாபிஷேக விழா


கரூர்:- க.பரமத்தி அருகே, உப்புபாளையம் மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
க.பரமத்தி அருகில், குப்பம் உப்புபாளையம் பழைய காலனி மதுரைவீரன் கோவில் உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கப்பட்டு, கொடுமுடி காவிரி ஆற்றில் புனிதநீர் எடுத்து வந்து, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். மாலை, 6:00 மணிக்கு மேல் முதல் கால யாக பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை மங்கள இசையுடன் விழா தொடங்கியது. பின் கோபுரத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement