மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா


மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா


ஆத்துார்:ஆத்துார், ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி மேற்கு பனந்தோப்பில் உள்ள செல்வ விநாயகர், செல்வ மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவுக்கு கடந்த, 2ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில், சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைத்தனர். தொடர்ந்து மூலவர் விநாயகர், மாரியம்மன் சுவாமிகளுக்கு பல்வேறு அபி ேஷக பூஜை செய்தனர். பின் புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
சேலம், உடையாப்பட்டி குண்டுகல்லுார் ஆதிசக்தி மாரியம்மன், சக்தி மாரியம்மன், சக்தி விநாயகர், அஷ்டசித்தி விநாயகர், பால முருகன், வாராஹி அம்மன், ப்ரம்மமுகி அம்மன், காலபைரவர், சோமேஸ்வரர் நவக்கிரக தேவதைகள், நாகர் கோவில் கும்பாபிேஷக விழாவுக்கு, கடந்த, 24ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று சிவாச்சாரியார்கள், கலசத்தை கோவில் பிராகாரத்தை சுற்றிவந்து அனைத்து தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் பூஜை செய்து கலச தீர்த்தம் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைத்தனர். பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement