வேலாயுதம்பாளையம் ஸ்ரீபட்டத்தரசி அம்மன் 

திருப்பூர்; மங்கலம், வேலாயுதம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில், பொங்கல் விழா, 4ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 8ம் தேதி கம்பம் நடப்பட்டு, தினமும், காலை அம்மனுக்கு சிறப்பு பூஜையும், பக்தர்கள் பூவோடு எடுத்து ஆடும் நிகழ்ச்சியும், 10ம் தேதி விநாயகர் பொங்கலும், இரவு, அவிநாசி தீரன் கலைக்குழுவின் கம்பத்தாட்டம் நிகழ்ச்சியும் நடந்தது.

நேற்று பட்டத்தரசி அம்மன் மாவிளக்கு மற்றும் பொங்கல் விழாவும் நடந்தது. பெண்கள், மாவிளக்கு எடுத்தபடி ஊர்வலமாக சென்றனர்; தொடர்ந்து, கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

Advertisement