பல்கலைக்கழகத்தில் மகளிர் தின விழா

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மகளிர் மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.

மகளிர் மன்ற கன்வீனர் சரஸ்வதி வரவேற்றார். டி.ஜி.பி., ஷாலினி சிங் வாழ்த்தி பேசினார். பேராசிரியர் விவேகானந்தன் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மகளிர் முன்னேற்றத்தில் மனவலிமையின் பங்கு குறித்து பேசினார். மாணவர் நல தலைவர் ஞானு புளோரன்ஸ் சுதா, மாணவிகள் தடைகளை மீறி, வளர வேண்டும் என ஊக்குவித்தார்.

முனைவர் ராஜாத்தி நோக்கவுரை ஆற்றினார். முனைவர் கெஜலட்சுமி நன்றி கூறினார்.

விழாவையொட்டி, நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement