சேலம் மாவட்டம் முழுதும் மழைநத்தக்கரையில் 63 மி.மீ., பதிவு


சேலம் மாவட்டம் முழுதும் மழைநத்தக்கரையில் 63 மி.மீ., பதிவு


சேலம்:பருவநிலை மாற்றத்தால், சேலத்தில் கடந்த பிப்ரவரி முதல் வெயில் தாக்கம் அதிகரித்தது. அது கடந்த 5, 6ல், அதிகபட்சமாக, 100.6 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது. பின் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சூரியனும் அவ்வப்போது கண்ணாமூச்சி காட்டியது. பிற்பகலில் குளிர்ந்த காற்று வீசிய நிலையில், சேலத்தில் ஆங்காங்கே சாரல், மித மழை என பெய்தது. அதேபோல் மாவட்டத்தின் பல இடங்களில் மிதமழை, காற்றுடன் கூடிய மழை பரவலாக பெய்தது. இரவு முழுதும் விட்டுவிட்டு பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வெப்பம் தணிந்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக நத்தக்கரையில், 63 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கரியகோவில், 47, வீரகனுார், 43, ஆத்துார், 36, தம்மம்பட்டி, 33, கெங்கவல்லி, 26, ஆணைமடுவு, 22, வாழப்பாடி, 20, ஏற்காடு, 14.4, சங்ககிரி, 13.1, டேனிஷ்பேட்டை, 10.5, சேலம், 9.8, ஏத்தாப்பூர், 8, ஓமலுார், 5.5, மேட்டூர், 5.4, இடைப்பாடி, 2 மி.மீ., மழை பெய்துள்ளது. அதேபோல் நேற்று காலை வெயில் தாக்கம் காணப்பட்ட நிலையில், மதியம் ஆங்காங்கே மழை பெய்தது.
ஏற்காட்டில், 2ம் நாளாக நேற்று காலையும் சாரல் மழை பெய்தது. மதியம், 1:35 மணிக்கு கனமழையாக மாறி, 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இரு நாட்களாக பனிமூட்டம், மழையால் ஏற்காட்டில் வெப்பம் தணிந்து குளிரத்தொடங்கியுள்ளது. அதேபோல் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனுார், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இரண்டாம் நாளாக நேற்று பரவலாக மழை பெய்தது. V

Advertisement