திருமண மண்டபத்தில் புகுந்த பாம்பு மீட்பு

திருத்தணி:திருத்தணி -அரக்கோணம் சாலை, புதிய புறவழிச்சாலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நேற்று காலை மண்டபத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றார்.

அங்க 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

திருத்தணி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அரைமணி கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் பிடித்து, திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement