கோயிலில் கும்பாபிஷேகம்

இளையான்குடி: இளையான்குடி அருகே சானாரேந்தல் மாதாபுரத்தில் மாணிக்கவள்ளி அம்மன் கோயில் சிதிலமடைந்திருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், சுரேஷ், ஜெயராஜ் குடும்பத்தினர் உதவியுடன் கிராம மக்கள் சார்பில் திருப்பணிகள் நடந்தன.
நேற்று காலை சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
முன்னதாக கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன. விழாவில் எம்.எல்.ஏ., தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், நிர்வாகிகள் காளிமுத்து,கருணாகரன், கண்ணன் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை காரக்குளம்,சானாரேந்தல் மாதாபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement