ஹிந்து முன்னணிபொதுக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. அண்ணாநகர் பாரதமாதா சேவை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முத்தையன், மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், ராமராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், அன்பழகன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மணலி மனோகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடுகளை துவக்க வேண்டும்; மதுரையில் வரும் ஜூன் 22 ம் தேதி திருப்பரங்குன்றம் முருக பக்தர்களுக்கான மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்திட வேண்டும்; கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் நிதி ஒதுக்கியும் தேர் வடிவமைப்பு பணிகளை துவங்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது; பொது இடங்களில் உள்ள ஹிந்து தெய்வங்களை அந்தந்த பகுதியில் அதற்கான சொந்த இடங்களில் வைத்து முறையான வழிபாடுகளை செய்திட வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
ரம்ஜான் சிந்தனைகள்-14
-
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி
-
மே.வங்கத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி 7 பேர் உயிரிழப்பு
-
குஜராத்தில் 12 மாடி குடியிருப்பில் திடீர் தீ; 3 பேர் கருகி பலி
-
2028ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்; சொல்கிறது மோர்கன் ஸ்டான்லி
-
சத்தீஸ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்: அண்ணாமலை