அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து கட்டாயம் வேணும்; நேட்டோ பொதுச்செயலாளரிடம் அடம் பிடித்தார் டிரம்ப்

வாஷிங்டன்: டென்மார்க் வசமுள்ள கிரீன்லாந்தை, அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக நேட்டோ பொதுச்செயலாளருடன் அதிபர் டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, இது நிச்சயம் நடக்கும் என்று நினைப்பதாக டிரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். அந்த வகையில், கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணமாக இணைய வேண்டும் என்று கூறிய அவர், பனாமா கால்வாயை திரும்பப் பெறப் போவதாகவும் எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் என்று கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் சந்தித்து பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது டிரம்ப் கூறியதாவது: சர்வதேச பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அவசியம். அதை அமெரிக்காவுக்கு வேண்டும். இது நடக்கும் என்று நான் நினைக்கிறேன். இதற்கு முன்பு இதைப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை. தற்போது ஒரு முக்கியமான நபருடன் அமர்ந்திருக்கிறேன். நமக்கு சர்வதேச பாதுகாப்பு தேவை என்பது உங்களுக்கு தெரியுமா மார்க்? வெறும் பாதுகாப்பு அல்ல, சர்வதேச பாதுகாப்பு. நம்முடைய கடற்பகுதியை சிலர் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது பற்றி நான் உங்களிடம் பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்க்டிக் பகுதியில் சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை மார்க் ரூட் உறுதி செய்த போதும், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் டிரம்ப்பின் முயற்சி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
பின்னர், மார்க் ரூட் கூறுகையில், "வடக்கு மற்றும் ஆர்க்டிக் பகுதியில் உள்ள வழித்தடங்களை சீனா பயன்படுத்தி வருகிறது. ரஷ்யாவும் மீண்டும் ஆயுதங்களை குவித்து வருகின்றன. ஐஸ் பிரேக்கர் கப்பல்கள் நம்மிடம் பற்றாக்குறை உள்ளது. அமெரிக்கா தலைமையில் 7 ஆர்க்டிக் நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மேலும், இந்தப் பகுதியை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். சில விஷயங்கள் மாறுவது நமக்கு தெரியும். எனவே, நாம் அங்கு இருக்க வேண்டும்," எனக் கூறினார்.
மேலும்
-
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி
-
மே.வங்கத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி 7 பேர் உயிரிழப்பு
-
குஜராத்தில் 12 மாடி குடியிருப்பில் திடீர் தீ; 3 பேர் கருகி பலி
-
2028ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்; சொல்கிறது மோர்கன் ஸ்டான்லி
-
சத்தீஸ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்: அண்ணாமலை
-
இ.பி.எஸ்., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட்!