விபத்தில் இளைஞர் பலி

சிவகங்கை: கல்லல் அருகே கீழப்பூங்குடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் 34. இவர் மதகுபட்டியில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பணி முடிந்து டூவீலரில் ஊருக்கு சென்றார். சொக்கநாதபுரம் அருகே சென்றபோது ரோட்டில் பஞ்சர் ஆகி நின்ற லாரி மீது மோதி காயம் அடைந்தவர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement