நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

7

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மார்ச் 12) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

நேற்றைய போக்சோ




தங்கையை 'சீண்டிய' அண்ணன்


திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் உள்ள வள்ளுவர் நகரைச் சேர்ந்த, 5 வயது சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. டாக்டரிடம் அந்த சிறுமியை அழைத்துச் சென்றபோது, சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளானது தெரிந்தது.


இதுகுறித்து பெற்றோர் புகாரின்படி, கோட்டை அனைத்து மகளிர் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த, சிறுமியின் பெரியப்பா மகனான 17 வயது மாணவர் மீது போக்சோ வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

'சில்மிஷ' நண்பர்கள் சிக்கினர்



மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. நேற்று முன்தி னம் மாலை கடைக்கு சென்றவரை கடத்தி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பெற்றோர் புகாரின்படி, சிறுமிக்கு தொந்தரவு தந்த அதே பகுதியைச் சேர்ந்த டூ வீலர் மெக்கானிக் முத்துக்குமார், 18, பிளஸ் 2 மாண வர்கள் இருவர், பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் என ஆறு பேரை 'போக்சோ' சட்டத்தின்கீழ், அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

16 வயது சிறுமி கர்ப்பம்



ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 28, இவர், 2019ல் எண்ணுாரில் தங்கி வேலை பார்த்தபோது, மனைவியின் தங்கையான, 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.



இதனால் சிறுமி, ஆறு மாதம் கர்ப்பமானார். இதுகுறித்து எண்ணுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்து, ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த விசாரணை, திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஒன்பது சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.


இதில், ராஜ்குமாருக்கு அதிகபட்ச தண்டனையாக, வாழ்நாள் ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாகமூன்று ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ராஜ்குமார், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement