மாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம்

திருப்புவனம்: திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ஒட்டி நேற்று காலை 10:00 மணிக்கு முகூர்த்த கால் நடும் வைபவம் நடந்தது.

இந்தாண்டு திருவிழா மார்ச் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில் எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள், 28ம் தேதி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது.

முத்துமாரியம்மன் பங்குனி திருவிழா தொடங்க உள்ளதை அடுத்து நேற்று காலை முகூர்த்த கால் நடும் வைபவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை 10:00 மணிக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement