இளம் பெண் மாயம் போலீஸ் விசாரணை

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகில் மாயமான இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த மல்லிகைப்பாடி, காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜக்கண்ணு மகள் பூமிகா, 24; ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த, 10ம் தேதி காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. ராஜக்கண்ணு புகாரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement