10,000 கறவை பசுக்களுக்கு காப்பீடு திட்டம் அறிவிப்பு

கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலம் குறித்த அறிவிப்புகள்:

சிறப்பு கால்நடை வளர்ப்பு திட்டத்தின் கீழ் பால் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் அல்லாத கால்நடை விவசாயிகளுக்கு, 75 சதவீத மானிய விலையில் 7,500 கறவை பசுக்களுக்கு, சரிவிகித மாட்டு தீவனமும், 2,500 கலப்பின கன்றுகளுக்கு சரிவிகித கன்று தீவனம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியை அதிகாரிக்க 50 சதவீத மானியத்தில் ஒரு பசுவின் விலை 60 ஆயிரம் வீதம் இரண்டு கறவை பசுக்கள் வீதம் 1,500 பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

தேசிய கால்நடை இயக்க திட்டத்தின் கீழ் 10,000 கறவை பசுக்கள் மத்திய அரசின் 85 சதவீத பங்களிப்புடன் காப்பீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

புறக்கடை கோழி வளர்ப்பினை ஊக்குவிக்க 6 வாரம் வளர்க்கப்பட்ட 12,000 கடக்நாத் கோழிகள், 25,000 வான்கோழிகள் இலவசமாக வழங்கப்படும். முட்டையிடும் 20 கோழிகள், தீவனம், கூண்டு கொண்ட தொகுப்பு, 2,500 பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

200 கால்நடை விவசாயிகளுக்கு 60 ஆயிரம் மதிப்புடைய தீவன உருண்டை உற்பத்தி செய்யும் இயந்திரம், 100 பயனாளிகளுக்கு 35 ஆயிரம் மதிப்புள்ள தீவன புல் வெட்டும் இயந்திரம், 10 பயனாளிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கால்நடை குச்சி தீவனம் தயாரிக்கும் இயந்திரம், 2 ஆயிரம் பயனாளிகளுக்கு பசுந்தீவன பற்றாக்குறையை ஈடு செய்யும் பொருட்டு, பசுந்தீவன சைலேஜ் மற்றும் 2,500 மதிப்புடைய கால்நடை ரப்பர் பிளோர் மேட் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

Advertisement