40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு

20

சென்னை: 'வரும் நிதி ஆண்டில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்' என பட்ஜெட்டில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

பட்ஜெட்டின் முக்கி அம்சங்கள் பின்வருமாறு:




* முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் துணையோடு காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

* வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ., நீளத்திற்கு ரூ.310 கோடி ரூபாயில் பாலம் அமைக்கப்படும்.



* வரும் நிதி ஆண்டில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.


* கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவப் பரிசோதனை அட்டை வழங்கப்படும்.


* 700 டீசல் பஸ்களை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பஸ்களாக மறுசீரமைப்பு செய்யப்படும். இதற்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு.


* சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், தமிழக சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டம் கொண்டு வரப்படும்.


* கால்நடை வளத்தை அதிகரித்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை இனப்பெருக்க கொள்கை உருவாக்கப்படும்.


* விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும்.

Advertisement