ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!

3

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.


இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், அப்பாவு கூறியதாவது: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும். நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாளை மட்டும் கேள்வி நேரம் இல்லை.


வரும் மார்ச் 17ம் தேதி முதல் 5 நாட்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடை பெறும். மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.



நம்பிக்கையில்லா தீர்மானம்




அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இது ஒன்னும் புதுசு கிடையாது. இது குறித்து சட்டசபையில் முடிவு எடுக்கப்படும்.

சபையில் யார் பேசுவதையும் காட்டக் கூடாது என்ற குறுகிய எண்ணத்துடன் அரசு செயல்படவில்லை; தொழில்நுட்ப கோளாறால் கடந்த முறை அப்படி நடந்தது. இனி அப்படி நடக்காது. இவ்வாறு அப்பாவு கூறினார்.

Advertisement