ஸ்ரீமாரியம்மன் - ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

பல்லடம்; பல்லடம் அடுத்த பருவாய் கிராமத்தில், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா பிப்., 25ல், துவங்கியது.

விழாவில், நேற்று முன்தினம், விநாயகருக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மாகாளியம்மன் கும்பம் தரித்தல், அம்மை அழைத்தல், ஸ்ரீமாரியம்மன் - ஸ்ரீமாகாளியம்மன் திருக்கல்யாணம் ஆகியவை நடந்தன.

நேற்று ஆதி விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து, சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், மாரியம்மன், மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை, மஞ்சள் நீராடல் நிகழ்வுடன்விழா நிறைவடைகிறது.

Advertisement