போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: 'உக்ரைன் போர் நிறுத்தத்தைத் தடுப்பது ரஷ்யாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும்' என ரஷ்ய அதிபர் புடினை அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது. போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தை முடிவில், 'அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது' என டிரம்ப் தெரிவித்தார். இதனை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி செய்தார்.
30 நாள் போர்நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டாலும், ரஷ்யா அந்த திட்டத்தை இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும், இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: 30 நாள் போர்நிறுத்தத்தை ரஷ்யா கடைப்பிடிக்கத் தவறினால், நிதி விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும். போர் நிறுத்தத்தைத் தடுப்பது ரஷ்யாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும்.
உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து புடினுடன் விவாதிக்க அமெரிக்க தூதர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டனர்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.
உக்ரைனில் தனது ராணுவத் தாக்குதலைத் நடத்தக் கூடாது. மீறினால் ரஷ்யாவிற்கு பேரழிவு ஏற்படும். இருப்பினும், இந்த விளைவை நான் விரும்பவில்லை, ஏனென்றால் அமைதியை அடைவதே எனது குறிக்கோள். இவ்வாறு டிரம்ப் கூறினார்.





மேலும்
-
வீரவசனம் பேசினால் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது; இ.பி.எஸ்., பாய்ச்சல்
-
எம்.பி., பதவிக்கு சிபாரிசு பண்ணுங்க; செய்தியாளர்களிடம் கேட்கிறார் ராமதாஸ்
-
தமிழகத்தின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதி செய்யும்: முதல்வர் ஸ்டாலின்
-
மதம் மாற வற்புறுத்திய அப்ரிடி; பாக்., முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பகீர்
-
தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
-
அவிநாசியில் விவசாய தம்பதி கொலை; அண்ணாமலை கண்டனம்