ஏர்டெல், ஜியோ உடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்திற்கு பிரதமர் காரணம்: காங்., கண்டுபிடிப்பு

புதுடில்லி: ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் ஸ்டார்லிங்க் நிறுவனம் கூட்டு சேர பிரதமர் மோடி தான் காரணம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
செயற்கைக்கோள் வழி அதிவேக இணையதள சேவை வழங்க ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஒப்பந்தம் போட்டு உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இரண்டு நிறுவனங்களும், ஸ்டார்லிங்க்கின் இந்திய வருகையை எதிர்த்தன. இதற்கு வழக்கமான அலைக்கற்றை ஏலம் போல அல்லாமல், நிர்வாக ரீதியான ஒப்புதலை பெற, மத்திய அரசிடம் எலான் மஸ்க் விண்ணப்பித்ததே காரணம்.
எலான் மஸ்க் வாயிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் அமைதியை வாங்க விரும்பிய பிரதமர் மோடி, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஸ்டார்லிங்க் உடன் ஒப்பந்தம் போட ஏற்பாடு செய்தார் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்தியா வரியை குறைத்து விட்டதாக டிரம்ப் தினமும் கூறி வருகிறார். இந்தியா எதற்கு ஒப்புக் கொண்டது. எதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பது பற்றி எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. எலான் மஸ்க் மகிழ்ச்சியாக இருந்தால், அதிபர் டிரம்ப் மகிழ்ச்சியாக இருப்பார் என பிரதமர் நம்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.












மேலும்
-
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ராகுல்
-
திண்டுக்கல்லில் போக்குவரத்து விதி மீறியதாக 2416 வழக்குகள்: ரூ.6 லட்சம் அபராதம்
-
டோலி கட்டி தூக்கிச்சென்றும் பெண் உயிரை காப்பாற்ற முடியவில்லை; கொடைக்கானல் கிராமத்தினர் கண்ணீர்!
-
பார்க்கிங் பிரச்னையால் உயிரிழந்த விஞ்ஞானி: பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்