திண்டுக்கல்லில் போக்குவரத்து விதி மீறியதாக 2416 வழக்குகள்: ரூ.6 லட்சம் அபராதம்

திண்டுக்கல்:திண்டுக்கல் நகரில் ஹெல்மட் அணியாமல் செல்வது, குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட விதி மீறல்களுக்காக ஒரே
மாதத்தில் 2415 வழக்குகள் பதியப்பட்டு அவர்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகரில் டூவீலர்கள், கார்கள், தனியார் பஸ்களில் செல்வோர் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது, குடிபோதையில் வண்டிகளை இயக்குவது, ஹெல்மட் அணியாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு வகையான விதிமீறல்கள் அதிகளவில்

நடப்பதாகவும் இதனால் அப்பாவி மக்கள் விபத்தில் சிக்குவதாகவும் போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து எஸ்.பி.,பிரதீப் உத்தரவில் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போக்குவரத்து போலீசார் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட, நாகல்நகர், காந்தி மார்க்கெட், சப் ஜெயில் ரோடு, திருச்சி ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது ஹெல்மட் அணியாமல் வருவது, டூவீலரில் அதிகம் பேர் பயணிப்பது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, ஓட்டுநர்உரிமம் இல்லாமல் பயணிப்பது, தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்களை உபயோகிப்பது உள்ளிட்ட பல்வேறு வகையான போக்குவரத்து

விதி மீறல்களுக்கும் வழக்குகள் பதியப்பட்டது.

அந்த வகையில் பிப். மாதம் மட்டும் 2416 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள்பதியப்பட்டு அபராதமாக ரூ.6 லட்சம் விதிக்கப்பட்டது. இதில் 23 வழக்குகள் குடிபோதையில் வாகனங்களை இயக்கியதாக பதியப்பட்டுஅவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 100க்கு மேலான டூவீலர்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் பறிமுதல்
செய்யப்பட்டது. தொடர்ந்து திண்டுக்கல் நகர் முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துபோலீசார் தெரிவித்தனர்.

Advertisement