வரும் 23ல் கிராம சபை கூட்டம்

வரும் 23ல் கிராம சபை கூட்டம்


கரூர்:வரும், 23ல் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்திலுள்ள, 157 கிராம பஞ்சாயத்துகளில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வரும், 23ல் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம பஞ்., தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் போன்றவை கூட்ட பொருளாக எடுத்து கொள்ளப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement