சூடு பிடிக்கும் கோடநாடு வழக்கு விசாரணை முன்னாள் கூடுதல் எஸ்.பி., ஆஜர்
கோவை:கோநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் கூடுதல் எஸ்.பி., பெருமாள் சாமி நேற்று சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொலை, கொள்ளை சம்பவத்தில் போதுமான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் பல்வேறு தகவல்களை திரட்ட, போலீசார் தற்போது வரை 240க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீர பெருமாள், பெருமாள் சாமி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து, வீர பெருமாள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
அவரிடம் போலீசார் சுமார், 2 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக கண்ணன் மற்றும் ஐயப்பன் பணியாற்றினர் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மற்றொரு முதன்மை பாதுகாப்பு அதிகாரியான ஈரோடு, பவானி அருகே உள்ள ஜம்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., பெருமாள்சாமி நேற்று காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜர் ஆனார். போலீசார் அவரிடம் சுமார் 1.30 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த நீலகிரி போலீசார், இவ்வழக்கின் மூளையாக இருந்தகனகராஜ் மற்றும் சியான் ஆகியோரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்ய தவறிவிட்டனர். இந்நிலையில், இருவரும் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக இருந்த போது, அவர்களது மொபைல் எண்களுக்கு சில அழைப்புகள் வந்துள்ளன. மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் தற்போது பல்வேறு கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்திருக்கும் என சி.பி.சி.ஐ.டி., சிறப்பு விசாரணைக்குழு போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
சத்தீஸ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்: அண்ணாமலை
-
இ.பி.எஸ்., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட்!
-
15 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு
-
கைதிகள் தயாரிப்பு பொருட்களில் போலி 'பில்' மோசடி; பெண் எஸ்.பி., உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்
-
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்கம் விலை: சவரன் ரூ.66,400 ஆக விற்பனை!
-
தமிழக அரசின் வரம்புக்குள் தான் கடன் இருக்கிறது: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தகவல்