பொதுநல அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம்

கடலுார்: கடலுார் மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் அனைத்துக்கட்சி மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம், பொதுநல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாநகர செயலாளர் அமர்நாத் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மாதவன், தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். இதில், கடலுார் பஸ ்நிலையத்தை எம்.புதுாரில் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வரும் 27ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. மாநகராட்சி அடாவடி வரிவசூல் நடவடிக்கைகளை கண்டிப்பது. விழுப்புரம், கடலுார், தஞ்சை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையை உருவாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்தரசேகரன், அ.ம.மு.க., மாநில துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூ., வி.சி., மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம், மாநகர பொதுநல அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை; மளிகை பொருட்கள் வாங்க சென்றபோது கொடூரம்
-
தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
-
முதல்வர் பற்றி அவதூறு பேச்சு; சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து
-
மேஜிக் செய்வதற்கும் உண்மையான ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் என்ன?
-
ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு