கடலுாரில் ஈசன் ஐ.ஏ.எஸ்., அகாடமி திறப்பு

கடலுார்: கடலுார் வில்வ நகரில் ஈசன் ஐ.ஏ.எஸ்., அகாடமி திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவில் ராமகோமதி ஆனந்தன், குத்துவிளக்கேற்றினார். பயிற்சி மைய உரிமையாளர்கள் வெங்கடேசன், ஆனந்தி, பயிற்சி மையத்தை திறந்து வைத்தனர். பிரியங்கா பாலா வரவேற்றார். திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலைய ஒலிபரப்பு நிர்வாக அலுவலர் சிவ ஆனந்தகிருஷ்ணன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டித்தேர்வு குறித்து சிறப்புரையாற்றினார். மைய நிர்வாகி கோபிநாத் கூறுகையில், கடலுார் சுற்றுவட்டார மாணவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப குறைந்த கட்டணத்தில் தரமான பயிற்சியை தருவது மட்டுல்லாமல் காலத்திற்கு ஏற்ற திறன் வளர்ச்சியை தருவது தான் முக்கிய நோக்கம் என்றார்.

இங்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2, 4 ஆகிய தேர்வுகளுக்கும், முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளுக்கும், சீருடைப்பணியாளர் நடத்தும் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. தினமும் காலை 9:30 மணி முதல் நேரடி வகுப்புகளும், தேர்வு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சி மைய வகுப்புகளை ஆன்லைன் மூலமாகவும் பயிலவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement