பழநியில் பூச்சொரிதல் ரத ஊர்வலம்

பழநி: பழநி மாசி திருவிழாவில் மாரியம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரதம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.
பழநி மாசித் திருவிழாவில் மாரியம்மன் கோயில் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு பழநி, அடிவாரம், வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் ரதம் அலங்கரிக்கப்பட்டது. பாத விநாயகர் கோயில் முன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கீதா குத்துவிளக்கு ஏற்றினார். கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் செல்வகுமார் ரத ஊர்வலத்தை துவங்கி வைத்தார். டி.எஸ்.பி., தனஜெயன் முன்னிலை வகித்தார். ரதம் பூக்களால் வடிவமைக்கப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பாத விநாயகர் கோயிலில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. சங்கத் தலைவர் மூர்த்தி, நிர்வாக கமிட்டி தலைவர் முருகானந்தம், சபாநாயகர் செல்வம், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், நகரத் தலைவர் ஆனந்தகுமார், சரவண ரியல் எஸ்டேட் விஸ்வநாதன், தி.மு.க, நகர செயலாளர் வேலுமணி, கவுன்சிலர் சுரேஷ் அ.தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டனர்.
மேலும்
-
சத்தீஸ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்: அண்ணாமலை
-
இ.பி.எஸ்., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட்!
-
15 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு
-
கைதிகள் தயாரிப்பு பொருட்களில் போலி 'பில்' மோசடி; பெண் எஸ்.பி., உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்
-
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்கம் விலை: சவரன் ரூ.66,400 ஆக விற்பனை!
-
தமிழக அரசின் வரம்புக்குள் தான் கடன் இருக்கிறது: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தகவல்