போக்குவரத்து விதி மீறியதாக 2416 வழக்குகள்: ரூ.6 லட்சம் அபராதம்  

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் ஹெல்மட் அணியாமல் , குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட விதி மீறல்களுக்காக ஒரே மாதத்தில் 2415 வழக்குகள் பதியப்பட்டு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகரில் டூவீலர்கள், கார்கள், தனியார் பஸ்களை லைசென்ஸ் இல்லாமல் , குடிபோதையில் இயக்குவது, ஹெல்மட் அணியாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு வகையான விதிமீறல்கள் தொடர்பாக திண்டுக்கல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் திண்டுக்கல்லில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக பிப்.,ல் மட்டும் 2416 வழக்குகள் பதியப்பட்டு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 100க்கு மேலான டூவீலர்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement