மாடுகள் பிடிபட்டால் அபராதத்தோடு போலீசில் புகார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிடிபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதத்தோடு போலீசாரிடம் புகார் அளிப்பதோடு ஏலம் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக பகுதி ரோடுகள் ,தெருக்களில் பொதுமக்கள் ,வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகளை திரிகிறது. இதை பிடிக்கும் பணியில் நேற்று மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர். பிடிபட்ட மாடுகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராம் விதிக்கப்பட்டதோடு போலீசாரிடம் புகாரும் அளிக்கப்பட்டது. யாரும் உரிமை கோராத பட்சத்தில் மறுநாளே ஏலம் விடவும் பணிகள் நடந்து வருகிறது.

Advertisement