பொற்கோவில் பக்தர்கள் மீது தாக்குதல்: 5 பேர் காயம்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரும்பு தடியால் தாக்குதல் நடத்தினார். இதில் பக்தர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.


அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் பொற் கோவில் சேவகர்கள் இரண்டு பேர், மொஹாலி பதிண்டா மற்றும் பாட்டியாலாவைச் சேர்ந்த தலா ஒரு பக்தர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவருக்கு உதவியதாக கூறப்படும் நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனால், அங்கு கூடியிருந்த பக்தர்கள் அலறியடித்து ஓடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement