சாலை மையத்தடுப்பில் 25 மரக்கன்று நடவு

அவிநாசி; குளம் காக்கும் அமைப்பு மற்றும் களம் அமைப்பு சார்பில், அவிநாசியில் மரம் நடும் விழா நேற்று நடைபெற்றது.

குளம் காக்கும் அமைப்பு தலைவர் துரை துவக்கி வைத்தார். அவிநாசி - சேவூர் ரோடு, சிந்தாமணி தியேட்டர் அருகே, ரோட்டின் மையத்தடுப்பில் வரிசையாக மரக்கன்றுகள் நடப்பட்டன. தன்னார்வலர்கள், பொதுமக்கள், 'மரங்களை வளர்க்கும் மனங்களை வளர்ப்போம்; பசுமை பாரதத்தை உருவாக்குவோம்' என்கிற பதாகைகள் ஏந்தியவாறு, ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம், 25 மகாகனி மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளின் பாதுகாப்புக்கு, இரும்பு வலை கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை களம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் அதன் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Advertisement