தாளவாடியில் 19ல் 'உ.தேடி உ.ஊரில்'


தாளவாடியில் 19ல் 'உ.தேடி உ.ஊரில்'

ஈரோடு:'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமைகளில், வட்ட அளவிலான ஊரில் தங்கி, கலெக்டர் கள ஆய்வு செய்கிறார். இதன்படி வரும், ௧௯ம் தேதி தாளவாடி தாலுகாவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா களஆய்வு செய்கிறார். அன்று மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை தாலுகா அலுவலகத்தில் மக்களை சந்தித்து, குறை கேட்டு கோரிக்கை மனு பெறுகிறார். அன்றிரவு அங்கேயே தங்கி, 20ம் தேதி காலை, 9:00 மணி வரை அரசு துறைகளின் திட்டங்கள், செயல்பாடுகளை ஆய்வு செய்யவுள்ளார்.

Advertisement