பெண்கள் இடையே தகராறு: 10 பேர் கைது

நந்தம்பாக்கம், நந்தம்பாக்கம், பர்மா காலனியைச் சேர்ந்தவர் அவ்வை, 48. இவரை, அதே பகுதியைச் சேர்ந்தவர் லலிதா. இவர் முன்விரோதம் காரணமாக, அவ்வையை அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவ்வை தன் ஆதரவாளர்களோடு லலிதா வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டுள்ளார். இதில், பெண்கள் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் தலை முடியை பிடித்து, இழுத்து போட்டு தாக்கியுள்ளனர்.

இது குறித்து விசாரித்த நந்தம்பாக்கம் போலீசார், இரு தரப்பிலும் தலா ஐந்து பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement