கும்மிடி வழித்தட 27 புறநகர் ரயில்கள் ரத்து
சென்னை, பொன்னேரி -- கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, இன்று காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
இதன் காரணமாக இன்று, சென்ட்ரல் - கும்மிடிபூண்டி, சூலுார்பேட்டை மார்க்கமாக செல்லும் 27 புறநகர் ரயில்கள், ரத்து செய்யப்படுகிறது என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், சென்னை -- கும்மிடிப்பூண்டி இடையிலான ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இத்தேதிகளில் பயணியர் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் -- பொன்னேரி, மீஞ்சூர், எண்ணுார் இடையே, 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement