தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி

புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக் கிள்ளையில் தோட்டக்கலைத் துறை சார்பில் பனை மரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் வீரமணி தலைமை தாங்கினார். துணை வேளாண் அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். இதில் பனை மரத்தின் முக்கியத்துவம் குறித்தும், பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்களிக்கப்பட்டது. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்ககப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் மணிவாசகம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மணிகண்டன், ரமேஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கல்பனா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வசுமதி, கலைவாணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement