கல்லுாரியில் கலை இலக்கிய போட்டிகள்

தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ் துறை சார்பில் கல்லுாரி கூடல் விழா என்ற தலைப்பில் கலை இலக்கிய போட்டிகள் நடந்தது. முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார்.

கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

மதுரை காமராஜர் பல்கலை ஒப்பிலக்கியத்துறை தலைவர் சுமதி பங்கேற்று தன்னம்பிக்கை முக்கியத்துவம், எண்ணங்கள் செயல்களை வலுப்படுத்துதல் பற்றி பேசினார்.

போடி ஏல விவசாயிகள் சங்க கல்லுாரி முதலிடம் வென்றது.

Advertisement