மாணவி புகைப்படம் சித்தரித்து மிரட்டல்: பெரம்பலுார் வாலிபர் கைது பெரம்பலுார் வாலிபர் கைது

தேனி: தேனியை சேர்ந்த கல்லுாரி மாணவியிடம் பழகி, அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டிய பெரம்பலுாரை சேர்ந்த கம்யூட்டர் ஆப்பரேட்டர் அஸ்வின் 27, என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தேனி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அவரிடம் சமூக வலைதளம் மூலம் பெரம்பலுாரை சேர்ந்த அஸ்வின் அறிமுகமானார். தொடர்ந்து நட்பாக பழகி வந்த நிலையில், புகைப்படங்களை அனுப்புமாறு அஸ்வின் கூறினார். காதலனை நம்பி மாணவி புகைப்படங்களை அனுப்பினார். அதனை பதிவு செய்து கொண்டு மாணவியை அஸ்வின் மிரட்ட துவங்கினார். மிரட்டல் சம்பவம் பற்றி மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் மாணவியின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து மாணவியின் பெற்றோர், உறவினர்களுக்கு வாலிபர் அனுப்பினார்.

மாணவியின் தந்தை தேனி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் அஸ்வினை கைது செய்தனர்.

Advertisement