பழனிசாமியை சந்திப்பதை தொடர்ந்து தவிர்க்கும் செங்கோட்டையன்

2

சென்னை; பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில், அ.தி.மு.க., - எம்.எல். ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க., மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் பழனிசாமியை சந்திப்பதை, அவர் தவிர்த்தார்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கடந்த 9ம் தேதி கோவை அன்னுாரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார்.

அன்றிலிருந்து பழனிசாமி -- செங்கோட்டையன் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் பழனிசாமியை சந்திப்பதை, செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார்.

Advertisement