உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்

13

சென்னை: உட்கட்சி பிரச்னையை திசை திருப்ப எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.



சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. பின்னர் டிவிஷன் முறையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.


இந் நிலையில் முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;


ஆட்சியின் மீது குறை சொல்ல முடியாதவர்கள் - உட்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்ப நினைத்தவர்கள், சட்டசபைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.


கடந்த ஆட்சிக்காலத்தைப் போல் அல்லாமல், நடுநிலைமையோடு பேரவையை வழி நடத்திடும் சபாநாயகர் மீது நம்பிக்கை வைத்து, எதிர்க்கட்சியின் தீர்மானத்தைப் பேரவை நிராகரித்தது.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement