தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து

5

சென்னை: தமிழக அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.



கடந்த 2018ம் ஆண்டு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் பெரியகருப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்குகளை ரத்து செய்யுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement