ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

புதுடில்லி; மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து கவர்னருக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்துவிட்டார் என்ற புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து, பின்னர் கைதான அவர், ஜாமினில் விடப்பட்டார். பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீது இன்று (மார்ச் 17) விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கொடுத்தால் போதும் என்று கவர்னர் தரப்பில் முதலில் கேட்கப்பட்டது. தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை மொழி பெயர்த்து கேட்பதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து. 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்.
அதன் பின்னர், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி தருவது தொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.




மேலும்
-
உண்மையான அக்கறை எனில் டாஸ்மாக் முறைகேட்டில் நடவடிக்கை அவசியம்; த.வெ.க., வலியுறுத்தல்
-
என்னை வழிநடத்திய பகவத் கீதை: துளசி கப்பார்ட் நெகிழ்ச்சி
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து