மகளிர் உரிமை தொகை ரூ.2,500 தருவது எப்போது?

4

சென்னை:அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன், மகளிர் உரிமை தொகையை, 2,500 ரூபாயாக உயர்த்த, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


குடும்ப தலைவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம், கடந்த 2023 செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ., ஆளும் டில்லியில், குடும்ப தலைவியருக்கு மாதம் 2,500 வழங்கப்படும் என்று, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல புதுச்சேரியிலும், 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.


அதனால், தமிழக பட்ஜெட்டில், மகளிர் உரிமை தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. நிதி நெருக்கடியால், அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை என்றும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், 2,500 ரூபாய் வழங்கப்படும் என்றும், தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement