சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு: இ.பி.எஸ்., சொல்வது இதுதான்!

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகரை சந்தித்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., 'தி.மு.க., போல் எங்கள் கட்சியில் யாரும் அடிமை கிடையாது' என்றார்.
அடிமை அல்ல!
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது பற்றியும், சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் தனியாக சென்று சந்தித்தது குறித்தும், இ.பி.எஸ்., இடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது:
ஏன் சந்திக்கவில்லை என்பதை அவரிடம் (செங்கோட்டையன்) சென்று கேளுங்கள். தனிப்பட்ட பிரச்னைகளை இங்கு பேச வேண்டாம். தி.மு.க.,வினர் போல் அ.தி.மு.க.,வினர் அடிமை அல்ல. அ.தி.மு.க.,வினர் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். என்றைக்கும் நான் யாரையும் எதிர்பார்ப்பது கிடையாது. நான் சாதாரண தொண்டன். தலைவர் கிடையாது.
எதிரி தி.மு.க., தான்
தி.மு.க.,வை போல் வாரிசு அரசியல் கிடையாது. குடும்ப கட்சி கிடையாது. சர்வாதிகார ஆட்சி கிடையாது. சுதந்திரமாக அனைவரும் செயல்படுகிறோம். நான் யாரையும் அடிமையாக வைத்திருக்கவில்லை. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க., தான்.
அதை நான் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டேன். அ.தி.மு.க.,வில் தான் சுதந்திரம் கொடுக்கிறோம்' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.
மறுப்பு
இ.பி.எஸ்., கருத்து குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது குறித்து பேச வேண்டாம்' எனக் கூறி சென்று விட்டார்.










மேலும்
-
அமிர்தசரஸ் கோவிலில் கையெறி குண்டு வீச்சு: பாக்.,கிற்கு தொடர்பு என போலீசார் சந்தேகம்
-
கோவில் ஊழியர் மீது ஆசிட் வீச்சு; தெலங்கானாவில் பயங்கரம்
-
தத்தெடுப்புக்கு 2000 குழந்தைகள் காத்திருப்பு: மேற்குவங்கத்தில் தான் அதிகம்
-
நினைவில் வாழும் டாக்டர் சாந்தா
-
அசாமில் அமைதி ஏற்படுவதை காங்., விரும்பவில்லை: அமித்ஷா
-
அடுத்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்; எலான் மஸ்க் நம்பிக்கை