அமிர்தசரஸ் கோவிலில் கையெறி குண்டு வீச்சு: பாக்.,கிற்கு தொடர்பு என போலீசார் சந்தேகம்

அமிர்தசரஸ்: பஞ்சாபின் அமிர்தசரஸின் கந்த்வாலா பகுதியில் உள்ள கோவிலில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தாகுர்த்வாரா கோவிலில் நள்ளிரவு 12:35 மணிக்கு நடந்த இச்சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகி உள்ளன. அதில், மோட்டார் சைக்கிளில் கொடியுடன் வந்த இருவர் கோவிலை நோட்டமிட்டனர். பிறகு, பொருள் ஒன்றை உள்ளே வீசி விட்டு தப்பிச் சென்றனர். சிறிது நேரத்தில் கோவிலில் குண்டு வெடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.
அப்போது, கோவிலுக்குள் இருந்த அர்ச்சகர் காயமின்றி உயிர் தப்பினார். வேறு யாருக்கும் பாதிப்பு ஏதும் இல்லை. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அமிர்தசரஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமிர்தசரஸ் போலீஸ் கமிஷனர் குருப்ரீத் புல்லார் கூறியதாவது: அடிக்கடி இதுபோன்ற சம்பவங்களை நிகழ்த்துவது பாகிஸ்தானுக்கு வாடிக்கை. குற்றவாளியை பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்றார்.
முதல்வர் பக்வந்த் மன் கூறுகையில், பஞ்சாபில் நிலவும் அமைதியை கெடுக்க சமூக விரோத சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக போதை மருந்து கடத்தல் உள்ளது. இந்தியாவிற்குள் அடிக்கடி டுரோன்களை பாகிஸ்தான் அனுப்பி வருகிறது. இதனால், அவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம். பஞ்சாப் அமைதியாக இருக்க வேண்டும் என அவர்கள் ஏன் விரும்புவர்?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும்
-
சில வேடிக்கை மனிதர்களைப் போல வீழ்ந்து விட மாட்டேன்: யாரை சொல்கிறார் செங்கோட்டையன்
-
பினராயியை சந்திக்க கேரளா பயணம்: பட்ஜெட் கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் 'ஆப்சென்ட்'
-
பா.ஜ., வளர அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது; ரங்கராஜ் பாண்டே
-
தமிழை அறிமுகம் செய்த பேராசிரியர்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நெகிழ்ச்சி
-
தமிழக தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையமா? அன்புமணி கண்டனம்
-
கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா?: ரூபாய் குறியீடை மாற்றிவிட்டு மற்ற மொழிகளுக்கு அருங்காட்சியகமா?