தமிழை அறிமுகம் செய்த பேராசிரியர்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நெகிழ்ச்சி

சென்னை: ''கான்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்தபோது, எனக்கு பயிற்றுவித்த பேராசிரியர் சடகோபன் தான், எனக்கு தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் அறிமுகம் செய்தார். தமிழ் ஒரு இனிமையான மொழி,'' என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
தமிழ் ஒரு இனிமையான மொழி. எனக்கு சில வார்த்தைகள் தான் தெரியும். வணக்கம், எப்படி இருக்கீங்க. நன்றி.
நான் ஒரு அதிர்ஷ்டசாலி. நான் படித்த கான்பூர் ஐ.ஐ.டி.,யில் சடகோபன் என்ற பேராசிரியர் இருந்தார். அவர் தான் எனக்கு தமிழை அறிமுகப்படுத்தினார். தமிழ் கலாசாரத்தையும் அவர் அறிமுகம் செய்தார்.நாங்கள் அனைவரும் தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் மதிக்கிறோம்.
தமிழ், இந்த நாட்டின் சொத்து. இந்த உலகத்தின் சொத்தும் கூட. அதில் நாம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவோம்.
அனைத்து இந்திய மொழிகளையும் கொண்டாடுவோம். இந்த உணர்வோடு தான் நம் பிரதமர் பணியாற்றி வருகிறார். இந்திய நாட்டில் பேசப்படும் ஒவ்வொரு மொழியும் அதற்குரிய மகத்தான இடத்தை பெற வேண்டும்.உரிய மரியாதை கிடைக்கச் செய்ய வேண்டும். உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாடுபடுகிறார்.
நமது சகோதர உறவு, நட்புறவு, வேறுபட்ட நாகரிகங்களுக்கு இடையிலான உறவுகளில் எந்த ஒரு தடையும் வந்து விடக்கூடாது.
நம் நாட்டை வலிமையானதாக்கும் ஒற்றை இலக்குடன் தான் நாம் அனைவரும் பார்க்க வேண்டும்; பணியாற்ற வேண்டும். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியாவை உயர்த்தவும், நமது வலிமையை உலகம் அங்கீகரிப்பதை உறுதி செய்யவும் நாம் பாடுபட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.










மேலும்
-
சில வேடிக்கை மனிதர்களைப் போல வீழ்ந்து விட மாட்டேன்: யாரை சொல்கிறார் செங்கோட்டையன்
-
பினராயியை சந்திக்க கேரளா பயணம்: பட்ஜெட் கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் 'ஆப்சென்ட்'
-
பா.ஜ., வளர அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது; ரங்கராஜ் பாண்டே
-
தமிழக தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையமா? அன்புமணி கண்டனம்
-
கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா?: ரூபாய் குறியீடை மாற்றிவிட்டு மற்ற மொழிகளுக்கு அருங்காட்சியகமா?
-
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா: ரூ.12 லட்சம் பங்கு பத்திரத்துடன் தவித்தவருக்கு கை மேல் கிடைத்தது உதவி