'காவல் உதவி' செயலி25,000 பேர் பதிவிறக்கம்
'காவல் உதவி' செயலி25,000 பேர் பதிவிறக்கம்
திருச்செங்கோடு:திருச்செங்கோடு தனியார் கல்லுாரியில், நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில், 'காவல் உதவி' செயலியை, 25,000க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவியர் ஒரே நேரத்தில், தொலை
பேசியில் பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்தார். இதில், கல்வி நிறுவனங்களின் முதன்மை அலுவலர் சொக்கலிங்கம் வரவேற்றார். ஏ.டி.எஸ்.பி.,
சண்முகம், டி.எஸ்.பி., கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'காவல் உதவி' செயலி பல்வேறு அம்சங்களுடன்,
தமிழக போலீசாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியை, 25,000 மாணவியர் ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்யும் விதமாக, பல்வேறு காவல்துறை அதிகாரிகள், கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் என, பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
'காவல் உதவி 181' என்ற வடிவத்தில் மாணவியர் அணிவகுத்து நின்று ஒரே நேரத்தில் செல்போனை அசைத்து காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மேலும்
-
மாடு குறுக்கே வந்ததால் விபத்து பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
-
சூதாட்டம் ஆடிய 8 பேர் கைது ரூ.1 லட்சம், 6 பைக் பறிமுதல்
-
படிக்கட்டில் தவறி விழுந்த பம்ப் ஆப்பரேட்டர் பலி
-
பட்ஜெட்டில் திருவள்ளூர் மாவட்டம் புறக்கணிப்பு...ஏமாற்றம்: வளர்ச்சி திட்டம் அறிவிக்காததால் மக்கள் அதிருப்தி
-
பள்ளி ஆசிரியரை தாக்கிய நால்வர் மீது வழக்கு பதிவு
-
ஆட்டோ - கார் மோதல் இருவர் படுகாயம்