தனி அடையாள எண் பதிவுதுரிதப்படுத்த 18ல் முகாம்
தனி அடையாள எண் பதிவுதுரிதப்படுத்த 18ல் முகாம்
சேலம்:விவசாயிகள், அரசின் திட்டப்பலன்களை பெற, ஆதார், மொபைல் எண், நில உடைமை விபரங்களை விடுபாடின்றி இணைக்கும் பணி, அனைத்து வருவாய் கிராமங்களில் நடக்கிறது. விவசாயிகள், பொது சேவை மையங்களுக்கு சென்று, நில உடைமை விபரங்களை இணைத்துக்கொள்ளலாம். அனைத்து விபரங்களும் தொகுத்து ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவ, தேசிய அளவில் அடையாள எண், ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்படும்.
சேலம் மாவட்டத்தில், 2,08,299 விவசாயிகளில், 89,118 பேர் மட்டும் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்துள்ளனர். 1,19,181 பேர் பதிவு செய்யப்படவில்லை. அதனால் உழவர் நலத்துறை அலுவலர்கள், கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் கலந்து கொண்டும், விவசாயிகள், தங்கள் நில உடைமை ஆவணங்களை, கட்டணமின்றி வரும், 31க்குள் பதிவு செய்து பயன்பெறலாம். பதிவை துரிதப்படுத்த வரும், 18ல் மாவட்டத்தில் உள்ள, 20 ஒன்றியங்களிலும் வேளாண் அடுக்கக செயலி உள்ளீட்டு பெருவிழா நடத்தப்படுகிறது என, சேலம் மாவட்ட வேளாண் இணை
இயக்குனர் சிங்காரம் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !