ரூ.99 லட்சம் மோசடி: மேலும் 3 பேர் கைது


ரூ.99 லட்சம் மோசடி: மேலும் 3 பேர் கைது


சேலம்:பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி, 28. டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கு, 2023 டிசம்பரில், பகுதி நேர வேலை வழங்குவதாக, டெலிகிராமில் தகவல் வந்தது. அதை நம்பிய பூபதி, தொடர்பு கொண்டு பேசினார். பின் அவர்கள், 'ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டினால் அதிக பணம் கிடைக்கும்' என கூற, அவரும், 21.29 லட்சம் ரூபாயை கட்டி ஏமாந்தார். இது
குறித்து, 2024 பிப்ரவரியில் பூபதி புகார்படி, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, 3 பேரை கைது செய்தனர். நேற்று, கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் வாஹித், 23, முகமது ஷபி, 26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன்மூலம் இந்த வழக்கில் கைது எண்ணிக்கை, 5 ஆக உயர்ந்தது.
அதேபோல் மல்லுாரை சேர்ந்தவர் கிருபாகரன், 40; தனியார் மருத்துவ
மனையில் மருத்துவராக பணிபுரியும் இவர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தார். அதற்கு கமிஷன் தொகை கிடைத்தது. ஆனால், 2022 ஜனவரி முதல் பிப்ரவரி வரை, 78.60 லட்சம் ரூபாயை, மர்மநபர்கள் மோசடி செய்து விட்டனர். இது
குறித்து அவர், 2022 மார்ச்சில் அளித்த புகார்படி, சைபர் கிரைம் போலீசார் இருவரை கைது செய்தனர். நேற்று கோழிக்கோட்டை சேர்ந்த அசீம், 33, என்பவர் கைது செய்யப்பட்டார். இரு சம்பவங்களில், 99.89 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement