உழவர் சந்தை மேம்பாடு, நெல் தொகுப்பு திட்டம்விவசாய சங்க நிர்வாகிகள் வரவேற்பு
உழவர் சந்தை மேம்பாடு, நெல் தொகுப்பு திட்டம்விவசாய சங்க நிர்வாகிகள் வரவேற்பு
சேலம்:தமிழக சட்டசபையில், 2025 - 26ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் உழவர் சந்தை மேம்படுத்தல், நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கியதால் விவசாய சங்க நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
'2.0 திட்டம் கேள்விக்குறி'
ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழக தலைவர் அரங்க சங்கரய்யா: முதல்வர் உழவர் நல சேவை மையம், டெல்டா அல்லாத பகுதிகளில் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம், கரும்பு ஊக்கக்தொகை, 349 ஆக அதிகரிப்பு போன்றவை வரவேற்பு பெற்றாலும், விவசாயிகள் எதிர்பார்த்த சேகோசர்வ் மூலம் ஜவ்வரிசி தயாரிப்பு ஆலை, சிறு, குறு விவசாயிகளுக்கு நாட்டின பசு வழங்குதல், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்குதல், 2023 பட்ஜெட்டில் அறிவித்த, 2.0 திட்டம், இன்னும் கேள்விக்குறியாக இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
'மானியத்தில் செடிக்கு பாராட்டு'
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சேலம் மாவட்ட தலைவர் தங்கவேல்: 50 உழவர் சந்தைகளை தேர்ந்தெடுத்து கூடுதல் கடைகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்த, 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு, எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு, 75 சதவீத மானியத்தில் வழங்குவது பாராட்டத்தக்கது. ஆனால் அடுத்த நிதியாண்டில், 1,477 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி அறிவிப்பு சாத்தியமல்ல. அப்போது தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும். அதனால் இருக்கும் ஓராண்டுக்குள், மத்திய அரசுடன் இணக்கமாக சென்று, உரிய நிதியை பெற்றால் மட்டுமே, அறிவித்த வேளாண் திட்டம் அமல்படுத்த வழி கிடைக்கும்.
'மத்திய அரசிடம் இணக்கம்'சேலம் மாவட்ட உழவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்: உழவர்கள் மேம்பட, 10 கோடி ரூபாயில் முந்திரி வாரியம், பாரம்பரிய காய்கறி சாகுபடிக்கு, 2.4 கோடி ரூபாயில் சிறப்பு தொகுப்பு திட்டம், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க, 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, காளான் உற்பத்தி மேம்படுத்த, 5 உற்பத்தி நிலையம் என, குறிப்பிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
மீதி பெரும்பாலான அறிவிப்பு கானல்நீர் போன்றது. 2026ல் தேர்தல் நடக்க உள்ளதால், எதையும் சாதிக்க முடியாது. மத்திய அரசிடம் இணக்கம் காட்டினால் திட்டத்தை செயல்படுத்த ஓரளவு வாய்ப்புள்ளது.
'எல்லா அறிவிப்பும் நன்று'சேலம் கிழக்கு மாவட்ட விவசாயிகள் நலச்சங்க தலைவர் சின்னசாமி: உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு, 160 கோடி ரூபாய், கிராமங்களிலேயே உழவர்களை சந்தித்து தொழில்நுட்ப ஆலோசனை வழங்க, உழவரை தேடி வேளாண் திட்டம், அனைத்து வேளாண் பணியும் இயந்திரமாக்க, 3 கோடி ரூபாயில் உழவர் செயல் விளக்கம், எண்ணெய் வித்துகள் பயிர் வளர்ச்சியை அதிகரிக்க, 2 லட்சம் ஏக்கரில், 108 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம், சிறுதானிய இயக்கம் செயல்படுத்த, 52 கோடி ரூபாய் என, எல்லா அறிவிப்பும் நன்றாக உள்ளது.
'யானை பசிக்கு சோளப்பொரி'கல்வராயன்மலை கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் பழனி
சாமி: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கரும்பு டன்னுக்கு, 4,000 ரூபாய் தருவதாக தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்த அறிவிப்பு இல்லை. இந்த பட்ஜெட்டில், 'யானை பசிக்கு சோளப்பொரி' போன்று ஊக்கத்தொகை மட்டும் அறிவித்து கரும்பு விவசாயிகளை மீண்டும் ஏமாற்றியுள்ளனர். போதிய விலையின்றி, மலை பகுதி
களில் கரும்புக்கு பதில் மாற்றுப்பயிர் சாகுபடி செய்துவருகின்றனர். கடந்தாண்டு அறிவித்த மின் இணைப்புக்கு பலர் காத்திருப்பு பட்டியலில் உள்ள நிலையில், தற்போது மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளனர். துரிதமாக வழங்க வேண்டும்.